மீரா ஜாஸ்மினை விரைவில் மணப்பேன் என அவரது காதலர் மாண்டலின் ராஜேஷ் கூறினார். மீரா ...
மீரா ஜாஸ்மினை விரைவில் மணப்பேன் என அவரது காதலர் மாண்டலின் ராஜேஷ் கூறினார். மீரா ஜாஸ்மினும், மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷும் காதலித்து வருகின்றனர். இதற்கிடையில் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது, திருமணம் நடக்காது என்றெல்லாம் கிசுகிசு பரவியது. இந்நிலையில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜேஷ், முதல் முறையாக மீரா ஜாஸ்மினுடனான திருமணம் பற்றி பகிரங்கமாக பேட்டி அளித்தார். அதில், 'மீரா ஜாஸ்மினுடனான திருமணத்தை இதற்குமேலும் தாமதிக்க விரும்பவில்லை. விரைவில் எங்கள் திருமணம் நடக்கும். திருமணத்துக்கு பிறகு மீரா நடிப்பாரா? இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது. அந்த முடிவை அவர்தான் எடுப்பார்' என்றார்.
Comments
Post a Comment