வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சையில் சிக்குகிறேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜீவாவுடன் சிங்கம் புலி, ஆர்யா தம்பி சத்யாவுடன் காதல் டூ கல்யாணம் படங்களில் நடிக்கிறார் திவ்யா.கன்னட பட ஷூட்டிங்கில் டான்ஸ் மாஸ்டருடன் திவ்யாவுக்கு மோதல் ஏற்பட்டது. ஒரு பட நிகழ்ச்சியில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்க மறுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக பேசினார். ட்விட்டரில் தான் நடிக்கும் காதல் டூ கல்யாணம் படம் பற்றி கிண்டலாக கமென்ட் அடித்தார். இதனால் அப்படக்குழு அப்செட் ஆனது. இது போல் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்குகிறார் திவ்யா.இது பற்றி அவர் கூறியதாவது:எதையும் மறைக்கும் குணம் எனக்கில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசி விடுவேன். அது வீடாக இருந்தாலும் சரி, வெளியிடமாக இருந்தாலும் சரி. அது சிலருக்கு பிடிப்பதில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. எப்போதும் பாசிட்டிவ் எண்ணங்களுடனே நான் இருப்பேன். தேவையில்லாமல் யாராவது வம்புக்கு வந்தால் சும்மா இருக்க மாட்டேன். கன்னடத்தில் இப்போது மூன்று படங்களில் நடிக்கிறேன். சாம்பியன் லீக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய உள்ளூர் கிரிக்கெட் அணிகளை ஊக்குவிக்க தென் ஆப்பிரிக்கா செல்கிறேன். இவ்வாறு திவ்யா கூறினார்.

Comments

Most Recent