ஸ்ரீ நந்தீஸ்வரர் மூவிஸ் சார்பில் சம்பத்குமார் தயாரிக்கும் படம், 'கவசம்'. இதில் முரளி, சரவணன், சாய், ராஜா சந்துரு, லக்ஷனா, பிருந்தா...
ஸ்ரீ நந்தீஸ்வரர் மூவிஸ் சார்பில் சம்பத்குமார் தயாரிக்கும் படம், 'கவசம்'. இதில் முரளி, சரவணன், சாய், ராஜா சந்துரு, லக்ஷனா, பிருந்தா நடித்துள்ளனர். எம்.எஸ்.மணிமாறன் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட, கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். மறைந்த முரளியின் உருவ படத்தை பரிதி இளம்வழுதி திறந்து வைத்தார்.
படம் குறித்து இயக்குனர் மணிமாறன் கூறும்போது, ''முதலும், கடைசியுமாக முரளி போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'கவசம்'. இது அவருக்கு 100&வது படம். தன் தம்பி ராஜா சந்துரு மீது பாசத்தைப் பொழியும் அதிரடி தாதாவாக சரவணன் நடிக்கிறார். ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் முரளி, சரவணன் நடித்துள்ளனர். முரளியே டப்பிங் பேசியிருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், அடுத்த மாதம் ரிலீஸ் செய்கிறோம்'' என்றார்.

Source: Dinakaran
Source: India Glitz
Comments
Post a Comment