பசங்க படத்துக்கு புதுவை அரசு விருது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் ஆகியவை சார்பில் இந்திய திரைப்பட துவக்க விழா மற்றும் 2009-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் செல்வராஜ் வரவேற்றார். முதல்வர் வைத்திலிங்கம் விழாவை துவக்கி வைத்தார். 2009ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதையும் 50 ஆயிரம் ரொக்கப்பரிசையும், `பசங்க' பட இயக்குனர் பாண்டிராஜுக்கு முதல்வர் வழங்கினார். படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் கிஷோர், பாண்டி, முருகேஷ், தாரணி ஆகியோருக்கு கேடயங்களும், தலா
ரூ10 ஆயிரம் ரொக்கப்பரிசையும் முதல்வர் வைத்திலிங்கம் வழங்கி பேசுகையில், 'திரைப்பட விழா என்று சொன்னால் பெரியவர்கள், வயசானவர்கள், தத்துவம் பேசுபவர்கள் தான் வருவார்கள். பள்ளிக்கூட பசங்கள் எல்லாரையும் இங்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 'பசங்க' படத்துக்கு விருது வழங்கி இருக்கிறோம். மாணவர்களாகிய உங்களுக்கு பிடித்த தலைவர் டாக்டர் அப்துல்கலாம். அவர், கனவு காணுங்கள் என்று சொல்லியுள்ளார். அதுபோல் கனவு கண்டு சாதிக்க வேண்டும். அதைத்தான் இந்த படத்தில் இயக்குனர் காட்டியுள்ளார்' எனறார். இயக்குனர் பாண்டிராஜ், குழந்தை நட்சத்திரங்கள் கிஷோர், பாண்டி, முருகேஷ், தாரணி ஆகியோர் பேசினர். செய்தி விளம்பரத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் நன்றி கூறினார். விழாவையொட்டி `பசங்க` திரைப்படம் பிக் சினிமா ஜீவா, பாலாஜி, முருகா, ராஜா ஆகிய தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்காக நேற்று காலை இலவசமாக திரையிடப்பட்டது.

Comments

Most Recent