ரகசிய திருமணமா? : நடிகை சீதா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டிவி நடிகர் சதீஷை ரகசிய திருமணம் செய்யவில்லை என நடிகை சீதா மறுத்துள்ளார். படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தபோது, நடிகர் பார்த்திபனை காதலித்து மணந்தவர் சீதா. கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்றனர். சீதாவுடன் மகள் அபிநயா இருக்கிறார். இன்னொரு மகள் கீர்த்தனா, மகன் ராதாகிருஷ்ணன் இருவரும் பார்த்திபனுடன் உள்ளனர். இப்போது படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார் சீதா. டி.வி. தொடரிலும் நடிக்கிறார். இவருக்கும் டி.வி. நடிகர் சதீஷுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்திருக்கிறார் சீதா.
இதுபற்றி அவர் கூறும்போது, ÔÔசதீஷும் நானும் காதலிப்பது உண்மை. யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவல் பொய்யானது. சதீஷுக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. அவருக்கு விவாகரத்து கிடைத்ததும் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம்ÕÕ என்றார்.


Source: Dinakaran

Comments

Most Recent