போனி வர்மாவுடன் திருமணத்துக்கு பின் நடிப்பில் பிசியாகிவிட்டார் பிரகாஷ் ராஜ். தனது பட தயாரிப்பு வேலைகளுடன் பெங்களூரில் நடிப்பு அகாடமியை தொட...
போனி வர்மாவுடன் திருமணத்துக்கு பின் நடிப்பில் பிசியாகிவிட்டார் பிரகாஷ் ராஜ். தனது பட தயாரிப்பு வேலைகளுடன் பெங்களூரில் நடிப்பு அகாடமியை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக அமெரிக்காவிலுள்ள இந்திய பிசினஸ் மேன் ஒருவருடன் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து பெங்களூரில் இந்த நடிப்பு பயிற்சி அகாடமியை தொடங்குகின்றனர். அபியும் நானும் படத்தை கன்னடத்தில் நானு நன்ன கனசு பெயரில் ரீமேக் செய்து பிரகாஷ் ராஜ் இயக்கினார். இப்படம் 100 நாட்களை கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து கன்னடத்தில் மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
Source: Dinakaran
Source: India Glitz

Comments
Post a Comment