தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘வேட்டை’ படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பையா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ...
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘வேட்டை’ படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பையா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லிங்குசாமி படத்தை இயக்குகிறார். சிம்புவை டிராப் செய்துவிட்டு விஜய்-க்காக காத்திருந்தார் லிங்குசாமி. ஆனால் இளைய தளபதி பிசியாக இருந்ததால், யாரை ஹீரோவாக போடலாம் என யோசித்து வந்தார் லிங்குசாமி. இதனையடுத்து ஆர்யாவை ஹீரோவாக தேர்வு செய்தார் லிங்குசாமி.
சமீபகாலமாக சூப்பர் ஹிட் பாடல்களை அள்ளி அள்ளி வழங்கி வரும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கும் இசையமைக்கிறார். இதன் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். லிங்குச்சாமி இயக்கத்தில் பையா படத்தில் கலக்கியவர் தமன்னா என்பது நினைவிருக்கலாம். Source: Dinakaran
Comments
Post a Comment