எந்திரனின் மாந்திரீக வேலை ஆரம்பம்...

 ந்திரன் தனது மாயாஜால மாந்திரீக வேலையை கேரளாவிலும் காட்ட ஆரம்பித்துவிட்டது. கேரளாவில், மலையாளப் படங்களே பொதுவாக ஒரே நேரத்தில் 100 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகாத நிலையில் எந்திரன் 125 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. முதன் முதலாக இந்தச் சாதனையை எந்திரன் பெற்றுள்ளது. 


கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள நியூ, தான்யா, அஜந்தா ஆகிய 5 தியேட்டர்களில் எந்திரன் பட முன்பதிவு 27ந் தேதி(நேற்று) காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆனால் ரஜினி ரசிகர்கள் காலை 9 மணிக்கே வரிசைக்கட்டிவிட்டனர்.(இது ரஜினி ரசிகர்களின்வழக்கம்தானே...) 

எந்திரன் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 5 திரையரங்குகளிலும் 2 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டது. மற்ற பகுதிகளிலும் இதே நிலைதான்.  மலையாளத் திரைப்பட வரலாற்றில் பதிவாகும் முதல் சாதனை எந்திரனின் சாதனைதான். 

இது குறித்து அஞ்சலி, அதுல்யா தியேட்டர்களின் மேலாளர் அசோகன், “இதற்கு முன் எந்த படத்திற்கும் முன்பதிவு என்பதுகூட செய்யப்பட்டதில்லை. எந்திரன் படம்தான் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளிம் விற்று எங்களை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது” என்றார் அவர்.

எந்திரன் வல்ல கலெக்‌ஷனானா...

Comments

Most Recent