பிரபல ராக் இசைக்குழு வெல்வெட் ரிவால்வருடன் இணைந்தார் ஸ்ருதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

புகழ்பெற்ற வெல்வெட் ரிவால்வர் ராக் இசைக்குழுவில் ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ராக் இசைக்குழு, 'வெல்வெட் ரிவால்வர்'. இந்த இசைக்குழு வெளியிட்ட 'கான்டாபேன்ட்', 'லிபர்டாட்' உட்பட பல்வேறு இசை ஆல்பங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை. இந்த ராக் இசைக்குழுவின் டேவ் குஷ்னருடன் ஸ்ருதிஹாசன் இப்போது இணைந்துள்ளார். டேவுடன் இணைந்து ஸ்ருதி பாடல் எழுதி, பாட உள்ளார். இதற்காக விரைவில் ஸ்ருதிஹாசன் அமெரிக்கா செல்ல உள்ளார்.
இதுபற்றி ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, 'டேவின் பாடல்களுக்கு நான் ரசிகை. இப்படியொரு வாய்ப்பு வந்ததன் மூலம் என் கனவு நனவாகியிருக்கிறது. ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு வந்தால் அது நம்ப முடியாததாகத்தான் இருக்கும். இதன் மூலம் நானும் என் இசையும் உலகம் முழுவதும் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என்றார்.

Comments

Most Recent