ஐரோப்பாவில் காவலன் ‘விஜய்’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் சி.ரோமேஷ்பாபு தயாரிக்கும் படம், 'காவலன்'. விஜய், அசின் ஜோடி. முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், வடிவேலு, ரோஜா, லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.கே.ஏகாம்பரம். வசனம், குருவரன். இசை, வித்யாசாகர். பாடல்கள்: பா.விஜய், யுகபாரதி, கபிலன், விவேகா. கதை, திரைக்கதை எழுதி சித்திக் இயக்குகிறார். வேலூர் வி.ஐ.டி கல்லூரியில், 5 ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பிறகு காரைக்குடி, கும்பகோணம், மலேசியா, பாங்காக் பகுதிகளில் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
Source: Dinakaran

Comments

Most Recent