”எந்திரன்” முன்பதிவு – ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘எந்திரன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. இந்திய சினிமாவின் பிரமாண்ட படம் என்பதால் உலகம் முழுவதும் இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி எந்திரன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 ந¤மிடங்களில் ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ஹாலிவுட் படங்களைவிட டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தும் பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற¢பனை ஆனது இதுவே முதல் முறை என அங்குள்ள தியேட்டர் அதிபர்கள் வியந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை முதல் Ôஎந்திரன்Õ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு முதலே தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். ‘நாளைக்குரிய டிக்கெட்டை இப்போதே கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டாலும் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, பதிவு செய்துகொள்ளுங்கள். டிக்கெட் நாளைக்கு தாருங்கள்’ என ரசிகர்கள் அன்புத் தொல்லை தர ஆரம்பித்தனர். தியேட்டர் மேனேஜர்கள் ரசிகர்களிடம் பேசி அவர்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கே தமிழகம் முழுவதும் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் திரண்டனர்.
இன்று காலை முன்பதிவு தொடங்கும்போது கட்டுக்கடங்காத கூட்டம் தியேட்டர்களில் அலைமோதியதால் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையில் சத்யம், உதயம் தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அபிராமி தியேட்டரில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. 20 நிமிடங்களில் 8 நாளுக்கான டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டது. இதே போல¢ சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர், அபிராமி தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டது. ஆன¢லைன் முன்பதிவிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. மதுரை, திருச்சி, சேலம், கோவை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் புக் ஆயின. டிக்கெட் முன்பதிவில் இதுவரை எந்த இந்திய படமும் இத்தகைய சாதனைகளை புரிந்ததில்லை என தியேட்டர் அதிபர்கள் கூறினர்.
ENDHIRAN RESERVATION PHOTOS : CLICK HERE


Source: Dinakaran

Comments

Most Recent