கிளவுட் நைன் மூவீஸ் நிறுவனம் வெளியிட, ஒய்நாட் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் 'வ'. சிவா, லேகா வாஷிங்டன். எஸ்.பி.பி.சரண் நடித்துள்ளனர். ப...
கிளவுட் நைன் மூவீஸ் நிறுவனம் வெளியிட, ஒய்நாட் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் 'வ'. சிவா, லேகா வாஷிங்டன். எஸ்.பி.பி.சரண் நடித்துள்ளனர். புஷ்கர்&காயத்ரி இயக்கி உள்ளனர். படம் பற்றி அவர்கள் கூறியதாவது: தமிழ் சினிமாவில் இந்தப் படம் லேண்ட் மார்க்காக இருக்கும். ஒரே இரவில் நடக்கும் கதை. இரண்டு பிளாஷ் பேக் காட்சிகள் மட்டுமே பகலில் நடக்கும். மற்ற காட்சிகள் அனைத்தும் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ள. சென்னை நகரின் இரவு நேர அழகையும், அவலத்தையும் பதிவு செய்திருக்கும் படம். படத்தின் பெயர் குவார்டர் கட்டிங் என்பதல்ல. அது சப் ¬ட்டில்தான். 'வ' என்பது படத்தின் பெயர். 'வ' என்ற எழுத்து கால்வாசி என்பதைக் குறிக்கும். படம் அனைத்து வகையிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு முயற்சி.
Comments
Post a Comment