சன் பிக்சர்ஸ் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள படம் 'எந்திரன்Õ. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்துள்ளனர...
சன் பிக்சர்ஸ் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள படம் 'எந்திரன்Õ. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்துள்ளனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஹாலிவுட் படங்களுக்கு சவால்விடும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதையடுத்து மும்பையில் 'எந்திரன்Õ இந்தி பதிப்பான ÔரோபோÕ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இதில் அமிதாப்பச்சன் பங்கேற்று சிறப்பித்தார். ஐதராபாத்தில் தெலுங்கு பதிப்பான 'ரோபோÕ பட பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மோகன்பாபு கலந்துகொண்டனர். ஆடியோ விற்பனையில் Ôஎந்திரன்Õ பாடல்கள் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'எந்திரன்Õ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் முன்னிலையில் Ôஎந்திரன்Õ படத்தின் டிரெய்லரை பொத்தானை அழுத்தி வெளியிட்டார் ரஜினிகாந்த். டைரக்டர் ஷங்கர் உடனிருந்தார். தமிழ் திரையுலக முன்னணி நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலகினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை கே.கே. நகர் காசி, அம்பத்தூர் ராக்கி, மதுரை குரு, தமிழ் ஜெயா, கோவை சாந்தி, சாரதா, திருநெல்வேலி, பூர்ணகலா, திருச்சி கலை அரங்கம், புதுச்சேரி முருகா, சேலம் கீதாலயா, ராஜேஸ்வரி, வேலூர் வீனஸ், குடியாத்தம் கங்கா, திருவண்ணாமலை சக்தி ஆகிய திரை அரங்குகளிலும் இன்று டிரெய்லர் வெளியிடப்பட்டது. தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் நாளை வெளியிடப்படுகிறது.
Comments
Post a Comment