குமரி – கேரள எல்லையில் திருவனந்தபுரம் அருகே உள்ளது சாந்திகிரி பர்ணசாலை. இதன் சமர்ப்பண விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த க...
குமரி – கேரள எல்லையில் திருவனந்தபுரம் அருகே உள்ளது சாந்திகிரி பர்ணசாலை. இதன் சமர்ப்பண விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் கலாஞ்சலி நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நடிகர் மம்மூட்டி பேசியதாவது: கடவுளுடன் மிக நெருங்கி நிற்பவர்கள் கலைஞர்கள் ஆவர். நமது பண்பாட்டின் அடையாளம் கலையாகும். பாரம்பரியமாக நம்மை பின் தொடர்ந்து வருவது கலையும், பண்பாடும் மட்டுமே. கடவுளுடன் கலைஞர்கள் நெருங்கி நின்றாலும் கலையும், கலைஞர்களும் முழுமை பெறுவதில்லை. கடவுள் மட்டுமே முழுமை. அனைத்தும் கடவுளின் படைப்பாகும். மனிதனை போன்று பிற உயிர்களும் கடவுளின் படைப்பு என்பதை உணர செய்வதுதான் பண்பாடு. மனிதன் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் கடவுளை நினைக்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனக்கு ஏற்றவாறு கடவுளை வழிபட்டு வாழ்கிறான். இவ்வாறு மம்மூட்டி பேசினார். தொடர்ந்து பாடகர் ஜேசுதாஸின் இசைநிகழ்ச்சியும், சூரியா கிருஷ்ணமூர்த்தியின் நாட்டிய நாடகமும் மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சுப்பிடி, ஒடிசி, கதகளி போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.
Comments
Post a Comment