‘சங்கொலி ராயண்ணா’ என்ற கன்னட படத்தில் நடிக்க மறுத்து, படத்திலிருந்து விலகியுள்ளார் பிரியாமணி. இதில் தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். நாகண்ணா இய...
‘சங்கொலி ராயண்ணா’ என்ற கன்னட படத்தில் நடிக்க மறுத்து, படத்திலிருந்து விலகியுள்ளார் பிரியாமணி. இதில் தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். நாகண்ணா இயக்குகிறார். கர்நாடகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் கதையாக இப்படம் உருவாகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி கொல்லப்பட்ட தியாகி வேடத்தில் தர்ஷன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கத்தான் பிரியாமணியிடம் கேட்டனர். முதலில் நடிக்க சம்மதித்தவர், இப்போது திடீரென இதில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.
இது பற்றி இயக்குனர் நாகண்ணா கூறும்போது, “இப்படத்தில் நடிக்க சில மாதங்களுக்கு முன் கேட்டபோது, பிரியாமணி ஓகே சொல்லியிருந்தார். சமீபத்தில் அவரது மேனேஜரும் இதை உறுதி செய்தார். இதையடுத்து அட்வான்ஸ் பணம் தருவது பற்றி பேசியபோது, இதில் நடிக்கவில்லை என பிரியாமணி கூறிவிட்டார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தியாகியின் வரலாறு என்பதால் படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் இருக்காது. அது தெரிந்துதானே முதலில் நடிக்க சம்மதித்தார். இப்போது ஏன் விலக வேண்டும¢? படத்தில் அவருக்கு கிளாமர் வேடம் கிடையாது. அதனால்தான் நடிக்க மறுத்துள்ளார்” என்றார். இயக்குனரின் இந்த கருத்தால் அப்செட்டில் இருக்கிறாராம் பிரியாமணி. Source: Dinakaran
Comments
Post a Comment