எந்திரன் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news



ஊர் முழுவதும் சூப்பர் ஸ்டார் காய்ச்சல், காரணம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன். இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் எந்திரன் திரைப்படத்தை சன் பிக்ச்ர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். கடந்த வாரம் தான் எந்திரன் டிரெய்லர் திரையிடப்பட்டது. டிரெய்லர் வெளியீட்டு விழாவை இது வரை யாரும் செய்யாத அளவுக்கு விழா எடுத்து அசத்தியது எந்திரன் டீம். தற்போது எந்திரன் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த சென்சார் கமிட்டி எந்திரன் படம் அற்புதமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஹாலிவுட்டுக்கு நிகராக காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் எந்திரன் கவரும் என சென்சார் கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது. இம்மாதம் வெளியீடு என போஸ்டர்கள் இணைதளம் முதல் நாளிதழ் வரை விளம்பரம் செய்யப்பட்டு வருவதால், படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Source: Dinakaran

Comments

Most Recent