கனிமொழி படத்துக்காக அனிமேஷன் டிரெய்லர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முதன் முறையாக 'கனிமொழி' படத்திற்காக அனிமேஷன் டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி கூறியதாவது: படத்தின் புரமோஷனுக்காக வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோதுதான் அனிமேஷன் டிரெய்லர் உருவானது. தொலைக்காட்சி விளம்பரத்துக்காக 2 நிமிடம் ஓடக்கூடிய இதை உருவாக்க 15 நாட்கள் ஆனது. ஹீரோ ஜெய்யும், ஹீரோயின் ஷசான் பதம்ஸியும் இதற்காக தனியாக நடித்து கொடுத்தார்கள். படத்தில் இடம்பெறாத காட்சிகள் கொண்ட இந்த டிரெய்லர், படம் எப்படிப்பட்டது என்பதை சொல்லும். இந்தியாவிலே இது முதல் முயற்சி. 

Source: Dinakaran

Comments

Most Recent