நயன்தாராவுடன் விரைவில் திருமணம் பிரபுதேவா பரபரப்பு பேட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

"நயன்தாராவை காதலிப்பது உண்மைதான். விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறேன்' என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் பிரபுதேவா.விஜய், நயன்தாரா ஜோடியாக நடித்த 'வில்லு' படத்தை பிரபுதேவா இயக்கினார். அப்போது நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்தது. பிரபுதேவாவை தீவிரமாக காதலித்த நயன்தாரா அவரது பெயரை தன் கையில் பச்சை குத்திக் கொண்டார். பல்வேறு விழாக்கள், ஷூட்டிங்கில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஆனால் இருவரும் காதலிப்பதாக இதுவரை கூறியதில்லை.இந்நிலையில் 'உருமி' படத்துக்காக மும்பை அருகே நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் பிரபுதேவா. அப்போது இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:'உருமி' படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. இந்த ஷெட்டியூல் முடிந்தவுடன் நான் இயக்கும் 'இச்' பட பணிக்கு செல்கிறேன். ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் பாடல் காட்சி படமாக்க உள்ளேன். இப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளது. மீடியா என்னைப்பற்றி அதிகமாக எழுதி விட்டன. அதுபற்றி என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. பதிலும் சொன்னதில்லை.நயன்தாராவை பொறுத்தவரை அவர் எனக்கு 'ஸ்பெஷல்'. எனக்காகாவே பிறந்தவர். அவரை காதலிக்கிறேன்.
 இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். இது எனது தனிப்பட்ட விஷயம். இதுபற்றி மீடியாவிடம் சொல்ல விரும்பவில்லை. எப்போதுமே, எனது எண்ணங்களை பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தியது கிடையாது. நயன்தாரா ஒரு குடும்ப பறவை. எளிமையானவர். யார் ஒருவர் காதலித்தாலும் அந்த காதலியுடன் நேரத்தை கழிக்கவே விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனால் அதற்கு எங்களுக்கு வாய்ப்பில்லை. இருவருமே பிஸியாக இருக்கிறோம். இப்போதுகூட அவர் முன்னணி இடத்தில்தான் இருக்கிறார். அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய ஏராளமானவர்கள் காத்திருக்கிறார்கள்.'என் மனதை நயன் கவர்ந்தது எப்படி?' என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு ஒன்றல்ல.. பல காரணங்கள் உள்ளன. என் வாழ்வின் சோதனையான நேரங்களில் அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். பாலைவனத்தில் இருந்த எனக்கு சோலைவனமாக திகழ்ந்தார். முன்பெல்லாம் அடிக்கடி டென்ஷனாக காணப்படுவேன். இப்போது என்னிடம் அந்த குணம் கொஞ்சம் கூட இல்லை என்று நண்பர்கள், உதவியாளர்களே சொல்கிறார்கள். அவர் உறுதியானவர். அதேபோல் என்னையும் மாற்றி இருக்கிறார். நிபந்தனையற்ற காதலை நயன் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதை பொது இடத்தில் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கிறார். அவர் அற்புதமான பெண். அவரிடம் எல்லாவற்றிலும் காதலைத்தான் பார்க்கிறேன். இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
Source: Dinakaran

Comments

Most Recent