'களவாணி'யில் அறிமுகமானவர் ஓவியா. இப்போது 'முத்துக்கு முத்தாக' படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: 'களவாணி...
'களவாணி'யில் அறிமுகமானவர் ஓவியா. இப்போது 'முத்துக்கு முத்தாக' படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: 'களவாணி'க்குப் பிறகு, கிராமத்துப் பெண்ணாக நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. ஒரேமாதிரி நடித்தால், சலிப்பு ஏற்படும் என்று மறுத்தேன். 'முத்துக்கு முத்தாக' படத்தில் கிராமம், நகரம் கலந்த வேடம். ஹரீஷ் ஜோடியாக வருகிறேன். ஜீவன் இயக்கும் 'அமரா' படத்திலும் மாடர்ன் கேரக்டர்.
எனக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ் தெரியும். கன்னடம் கஷ்டமாக இருந்தாலும், எஸ்.நாராயண் இயக்கத்தில் அவரது மகன் பங்கஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். இதன் பாடல் காட்சிக்காக மலேசியா சென்றிருந்தேன். விரைவில் கன்னடம் கற்றுக்கொள்வேன். தெலுங்கிலும் கேட்டுள்ளனர். 'களவாணி' ரிலீசுக்கு பிறகு என் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வதந்திகள். இதெல்லாம் எப்படி வருகின்றன என்றே தெரியவில்லை. வளரும்போது இதெல்லாம் சகஜம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அதனால், அது பற்றி கவலை இல்லை.
Comments
Post a Comment