பகவான் பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஸ்ரீ அன்னபூர்ணா கிரியேஷன்ஸ் சார்பில் மாதவி மோகன், ஆஷா முரளிதரன் தயாரிக்கும் படம், 'பகவான்'. இதன் பாடல் சி.டி வெளியீட்டு விழா ராம.நாராயணன், வி.சி. குகநாதன் முன்னிலையில் சென்னையில் நடந்தது. கேயார் வெளியிட, கீர்த்தி சாவ்லா பெற்றுக்கொண்டார். இப்படத்தில் யுவராஜ், உதயதாரா, வர்ஷினி நடித்துள்ளனர். இசை, கே.கே. ஏ.ஆர்.சைலேஷ் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறியதாவது:
ஒரு மனிதனிடம் கத்தியும் இருக்கிறது, பேனாவும் இருக்கிறது. அவன் கத்தியை எடுப்பதும், பேனாவை எடுப்பதும் சமுதாயத்தை பொறுத்தே அமைகிறது. ஹீரோ தன் ஆயுதமாக எதை தேர்வு செய்தான் என்பது கதை. ஆரம்பம் முதல் முடிவு வரை, யூகிக்க முடியாத காட்சிகள் இருக்கும். கிளைமாக்ஸ் காட்சி, இதுவரை எந்த படத்திலும் இடம்பெற்றது இல்லை. ஐதராபாத்தில் அந்த காட்சி படமானது.


Source: Dinakaran


Source: India Glitz

Comments

Most Recent