ஏசு கிறிஸ்து படத்துக்கு இசை அமைக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமல்ஹாசன் நடித்த 'மும்பை எக்ஸ்பிரஸ்', 'காதலா காதலா', 'மைக்கேல் மதன காமராஜன்', 'பேசும் படம்' ஆகிய படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர், ஏசு கிறிஸ்துவின் இளமை பருவத்தை மையப்படுத்தி புதிய படத்தை இயக்குகிறார். சர்வதேச அளவில் வெளியிடப்பட இருக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் ஜெருசேலத்தில் நடந்தது. இந்த படத்துக்கு இசையமைக்க பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் பேசி வந்தனர். இப்போது தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.


Source: Dinakaran

Comments

Most Recent