எஸ்.ஜே.சூர்யாவால் வாய்ப்பு இழந்தாரா நிகிஷா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த தெலுங்கு படம் 'கொமரம் புலி'. இதில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்தவர் நிகிஷா பட்டேல். அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த படத்தில் 18 வயதில் ஒப்பந்தம் ஆனேன். நடித்துக்கொண்டிருக்கும் போது ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால், இந்த பட ரிலீசுக்கு பிறகுதான் மற்றப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஏ.ஆர்.ரகுமான் இசை, பெரிய ஹீரோ என்பதால் நானும் எதுவும் சொல்லவில்லை.
இரண்டு வருடங்களாக ஒரே படத்தில் நடித்து டீன் ஏஜை இழந்துவிட்டேன். சில காட்சிகளில் நடித்த போது, நன்றாக நடித்திருப்பதாக நான் திருப்தியடைவேன். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஓவர் ஆக்டிங் என்பார். நான் எதிர்ப்பு தெரிவித்தாலும் எடுபடாது. தெலுங்கு ரசிகர்களுக்கு இப்படித்தான் வேண்டும் என்று அடுத்த டேக் எடுப்பார். இந்த படத்தை அதிகமாக எதிர்பார்த்தேன். ஹிட்டாகவில்லை. நடித்துக்கொண்டிருந்த போது வந்த வாய்ப்புகளை ஏற்றிருந்தால், இப்போது நான்கைந்து படங்களில் நடித்துக்கொண்டிருப்பேன். ஆனால், என் கேரியரை இழந்துவிட்டேன். இந்த பட தோல்வியால், ஹீரோவுக்கோ இயக்குனருக்கோ எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பெல்லாம் எனக்குதான்.
இவ்வாறு நிகிஷா பட்டேல் கூறியிருந்தார். இதையடுத்து, பவன் கல்யாண் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தனது டிவிட்டர் இணையதளத்தில், 'நான் சொன்னது திரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. பவனுடன் நடித்தது நல்ல அனுபவம். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன்' என்று நிகிஷா கூறியுள்ளார்.


Source: Dinakaran

Comments

Most Recent