ஸ்வேதா என்டர்பிரைசஸ் சார்பில், ஆனேக்கல் பாலராஜூ கதை எழுதி தயாரிக்கும் படம், 'தம்பி ஊருக்கு புதுசு'. சந்தோஷ், தனுஷிகா, மிஸ்டி முகர்...
ஸ்வேதா என்டர்பிரைசஸ் சார்பில், ஆனேக்கல் பாலராஜூ கதை எழுதி தயாரிக்கும் படம், 'தம்பி ஊருக்கு புதுசு'. சந்தோஷ், தனுஷிகா, மிஸ்டி முகர்ஜி, அவினாஷ், முத்துக்காளை, ஷகீலா நடிக்கின்றனர். சீனு, சசிகுமார் ஒளிப்பதிவு. குருகிரண், பூபேஷ்குமார் இசை. திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் தணிகை பாரதி, நிருபர்களிடம் கூறியதாவது:
கொலை, கொள்ளை சம்பவங்களை நடத்தும் கொள்ளையனையும், அவன் கூட்டாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க, குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினரால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், காவல்துறையினரின் பெயரில் சட்ட விரோத கும்பல் ஒன்று மக்களை துன்புறுத்தி, இளம் பெண்களை மானபங்கம் செய்கிறது. இதை கண்கூடாக பார்க்கும் ஹீரோ, காவல்துறையினருடன் கைகோர்த்து, சட்ட விரோத கும்பலை கண்டு பிடித்து கைது செய்ய உதவுகிறார். காவல்துறையை பெருமைப்படுத்தும் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. அக்டோபரில் படம் ரிலீஸாகிறது.
Comments
Post a Comment