'தாÕ பட ஷூட்டிங்கில் கரகம் அழைத்து வரும் காட்சியில் துணை நடிகருக்கு அருள் வந்ததால் நீண்ட நேரம் ஷூட்டிங் பாதித்தது. இது பற்றி இயக்குனர்...
'தாÕ பட ஷூட்டிங்கில் கரகம் அழைத்து வரும் காட்சியில் துணை நடிகருக்கு அருள் வந்ததால் நீண்ட நேரம் ஷூட்டிங் பாதித்தது. இது பற்றி இயக்குனர் சூர்யபிரபாகர் கூறியது: கோவை மதுக்கரை மார்க்கெட்டில் நடந்த திருவிழா காட்சிக்காக குச்சி ஆட்டம் ஆடும் கலைஞர்களை அழைத்து வந்து 2 இரவுகள் படமாக்கினோம். பம்பையை இடுப்பில் கட்டிக்கொண்டு கலைஞர்கள் முழங்குவார்கள். இந்த காட்சிக்கு பின், அம்மன் கோயிலில் இருந்து கரகம் அழைத்து வரும் காட்சி பகலில் படமாக்கப்பட்டது. இதில் ஒரிஜினலாக கரகம் அழைக்கும் பக்தர்களே நடித்தார்கள். குளத்தில் கரகம் தாலிக்கும் நிகழ்ச்சி முடிந்து அம்மன் சிலையை பக்தர் ஒருவர் தலையில் வைத்து நடக்கத் தொடங்கினார். அவருக்கு அருள் வந்துவிட்டது. இதனால் புறப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் அருள் வந்தவர் நின்றுவிட்டார். நீண்ட நேரம் அருள் வந்து ஆடியபடி இருந்தார். இதனால் ஷூட்டிங் நின்றது. பின் சம்பிரதாயப்படி, '10 விரல் மோதிரம் கேடி, எத்தனை பிரகாசம் அது கேடி, புறப்பட்டு வா நீÕ என பூசாரிகள் வசைமாறி பொழிந்து அவரை அழைத்தார்கள். காலையில் ஷூட்டிங் எடுக்கத் தொடங்கி மதியம்தான் குறிப்பிட்ட இடத்திலிருந்து திருவிழா நடக்கும் இடத்துக்கு அம்மன் வந்து சேர்ந்தது. ஹீரோ ஸ்ரீஹரி, ஹீரோயின் நிஷா உள்ளிட்ட ஆயிரம் பேர் நடித்தார்கள். ஒரு தலை காதலை மையமாக வைத்து இக்கதை உருவாகிறது.
Comments
Post a Comment