தெலுங்கில் ஒளிப்பதிவாளர் அஜய் போயன் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் ஸ்ரீகாந்த், நாக சைதன்யா இருவரும் அண்ணன், தம்பி வேடத்தி...
தெலுங்கில் ஒளிப்பதிவாளர் அஜய் போயன் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் ஸ்ரீகாந்த், நாக சைதன்யா இருவரும் அண்ணன், தம்பி வேடத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்துக்கு ஜோடி, சமிக்ஷா. இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து நாட்டில் 25 நாட்கள் நடந்தது. ஸ்ரீகாந்த் நடித்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. தாய்லாந்து ஸ்டண்ட் மாஸ்டர் பயிற்சி அளித்தார். வில்லன் ஆட்கள் ஸ்ரீகாந்தை துரத்தி வருவது போல் காட்சி. 6&வது மாடியில் இருந்து ஓடி வந்த ஸ்ரீகாந்த், 3&வது மாடியில் நின்று, திடீரென்று தரையில் குதித்து தப்பித்து ஓட வேண்டும். இக்காட்சி இரண்டரை நிமிடங்கள் ஓடுகின்ற அளவில், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது.
அப்போது ஸ்ரீகாந்த் 3&வது மாடியில் இருந்து தரையில் குதித்தார். பாதுகாப்புக்காக மெத்தை போடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த மெத்தையில் விழுந்த ஸ்ரீகாந்தின் வலது கால் திடீரென்று மடங்கிக் கொண்டது. இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, தாய்லாந்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment