தன் மகனை கலைத்துறையில் ஒப்படைத்துவிட்டு பிரியா விடை பெற்ற முரளியின் இறப்பு இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை. திரையுலகில் தனக்கென நிரந்தர ...
தன் மகனை கலைத்துறையில் ஒப்படைத்துவிட்டு பிரியா விடை பெற்ற முரளியின் இறப்பு இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை. திரையுலகில் தனக்கென நிரந்தர இடத்தை அமரர் முரளிக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதுதொடர்பான அறிவிப்பை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ளார். அவருடைய நினைவை போற்றும் வகையில், வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு, நடிகர் சங்கத்தில் அமைந்துள்ள சாமி சங்கரதாஸ் கலையரங்கில் நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, கில்டு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என தமிழ் திரையுலக அனைத்து பிரிவினரும் கலந்துகொள்கிறார்கள்.”
Source: Dinakaran
Comments
Post a Comment