எந்திரன் -ஒரு சிறப்பு பார்வை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்திய திரையுலகமே இது… என்ற ஆச்சரியத்தை உண்டாக்கிருக்கும் படம் தான் எந்திரன். ஒரே வட்டபாதையில் சுற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஒரு புதிய பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறது இந்த எந்திரன். ஏன் இந்த புகழாரம்… என்பதற்கு ஒரே காரணம் இந்த படைப்பை உருவாக்கி தமிழ் உழைப்பாளிகள்.
பொதுவாக ஒரு படத்தின் விமர்சனம் என்றால் ‘இதுதான் கதை… இதற்கு பிறகு என்ன நடக்கிறது” என்று சொல்லாம். ஆனால் எந்திரன் பொறுத்த வரை நீங்கள் விமர்சனத்தை கேட்பதை விட, இந்த பிரம்மாண்ட படைப்பை தியேட்டரில் சென்று பார்த்தால் தான் அனைத்து அற்புதங்களையும் உணர்வீர்கள். ஹாலிவுட் படங்களை பார்க்கும் போது, தமிழில் இது போன்ற படங்கள் வராத என ஏங்கிய ரசிகர்களுக்கு எந்திரன் மெகா விருந்ததாக அமைந்துள்ளது.
விஞ்ஞானி வசீகரன் தனது உழைப்பால் மனித உருவம் கொண்ட ரோபோவை உருவாக்கிறார். அதற்கு ‘சிட்டி’ என்று பெயர் வைக்கிறார். சில காலம் கழித்து சிட்டிக்கு உணர்வையும் கொடுக்கிறார். மனித குணங்களை உணர்ந்த ரோபோ செய்யும் குறும்புகளும், சாகஸங்களும் படம் முழுக்க பிரம்மாண்ட காட்சிகளோடு சொல்லியிருக்கிறார் ஷங்கர்.
கிரிக்கெட் போட்டியில் கங்குலி-சச்சின் பாட்னர் ஷிப் போல ஷங்கர்-ரஜினியின் பாட்னர் ஷிப் ஒரு இமலாய இலக்கை எட்டியிருக்கிறது. அதே போல எந்திரன் படைப்பிற்கு உழைத்த அனைத்து டெக்னிஷியங்களுக்கும் ஹேட்ஸ் ஆஃப்.
கலை இயக்குனர் சாபுசிரில்
ஒரு விஞ்ஞானியின் ஆய்வுக் கூடம் எப்படியிருக்கும், அவரது வீடு எப்படியிருக்கும், கருத்தரங்கங்கள் எப்படியிருக்கும் என்பதை புரிந்து வேலை செய்திருக்கிறார் சாபுசிரில், பாடல் காட்சிகளிலும், சாகச காட்சிகள் தனது செட்டுகளை அமைத்து அசதாரண காரியங்களை செஞ்சி அசத்திருக்கிறார் சாபுசிரில்!
வசனகர்த்தா சுஜாதா!
அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை…ஆனால் மகா அர்த்தமுள்ளவை, ‘காதல் வந்தால் ரோபாவிற்கும் நெட்டு களண்டு விடும்’ என ரோபோ சொல்லும் வசனங்கள் அரங்குகளில் கைதட்டல் பெறுகிறது. ஒரு உண்மையான எழுத்தாளர் நினைத்தால் கொசுக்கும் வசன எழுத முடியும் என நிரூபித்திருக்கிறார் சுஜாதா. மனிதனைப் போல் கொசுவிற்கும் பேசும் திறமை இருந்தால் இப்படி தான் பேசியிருக்கும் என ரசிகர்களுக்கு உணர்த்திருக்கிறார் சுஜாதா. அவரது உழைப்புக்கு இந்த படைப்பு சமர்ப்பணம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு!
எந்திரன் போன்ற படைப்பை உருவாக்க இந்த மனிதனின் உழைப்பை பாராட்டியாக வேண்டும். ஒரு கமிராமேனின் பங்கு இவ்வளவு தான் என்று சொல்வதை விட, காட்சிக்கு காட்சி அற்புதமாக உழைத்து தெளிந்த நீரோடை போல காட்சிகளை கண்ணிற்கு விருந்து படைத்திருக்கிறார் ஆர்.ரத்னவேலு. இயக்குனரின் உணர்வை உள் வாங்கி அதை அப்படியே வெளிகாட்டியிருக்கிறார் ரத்னவேலு. பாடல் காட்சியில் தெளிவும் அழகும், சாகச காட்சியில் பிரம்மாண்டத்தையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ரத்னவேலு. இந்த படத்திலிருந்து ரண்டி-க்கு (ரத்னவேலுவிற்கு) ஹாலிவுட் பட வாய்ப்புகள் வர வாய்ப்பும் உண்டு!
எடிட்டிங் ஆண்டனி!
மின்னல் வேக கதைக்கு அற்புதமாக எடிட்டிங் செய்து அசித்திருக்கிறார் ஆண்டனி. முதல் பாதியில் தொடங்கி இரண்டாவது பாதி வரை கதையை உணர்ந்து படிப்படியாக வேகத்தை கூட்டியிருக்கிறார் ஆண்டனி. விஞ்ஞான பூர்வமான ஒரு படத்திற்கு புதுவிதமான எடிட்டிங் ஸ்டைலை உருவாக்கி அசித்திருக்கிறார் ஆண்டனி.
கிராபிக்ஸ் காட்சி
அவதார்', 'டெர்மினேட்டர்' உட்பட பல ஹாலிவுட் படங்களை உருவாக்கிய, அமெரிக்காவில் உள்ள ஸ்டான் வின்ஸ்டைன் ஸ்டூடியோ கிராபிக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறது.  அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான்!
எந்திரனின் திரைக்கு பின்னால் இருக்கும் இன்னொரு ஹீரோ என்றால் அது ரகுமான் தான். இந்த படத்திற்காக தனது உழைப்பை டபுள் ஆக்கி காட்சிகளுக்கு இசையமைத்துள்ளார் ரகுமான். ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தை பார்த்தால் புரியும். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி நெருங்க… நெருங்க… அவர் ஏற்படுத்திய இசை ஒலிகளும் வியக்க வைக்கிறது. ‘புதிய மனிதா பூமிக்கு வா’ என்ற டைட்டல் சாங் தொடங்கி. ‘அரிமா, அரிமா’ சாங் வரை ரகுமானின் இசை தாளம் போட வைக்கிறது. குறிப்பாக ‘பூம்.. பூம்.. ரோபாடா’ ‘கிளிமாஞ்ரோ’ பாடல் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் கவர்கிறது. தீம் மியூசிக் இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானிற்கு இன்னொரு ஆஸ்கார் கொடுத்தால் கூட தவறில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்கலாம். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல் வெல் டன் ஏ,ஆர்.ரகுமான்.
ரசூல் பூக்குட்டி
'எந்திரனு'க்கான விசேஷ ஒலிகளை டி.டி.எஸ்ல மிக்ஸ் பண்ணியிருக்கார் ரசூல் பூக்குட்டி. ஸ்லம் டாக் மில்லியினர் படத்தில் டி.டி.எஸ் ஒலிகளை வித்தியசமான முறையில் எழுப்பி அனைவரின் கவனத்தை ஈர்த்த ரசூல் பூக்குட்டி, எந்திரன்  படத்திலும் தன் பாணியை கையாண்டு தனது முத்திரையை பதித்துள்ளார்.
நாயகி ஐஸ்வர்யா ராய்!
ஐஸ்வர்யா ராய்-ரஜினி கம்பினேஷன் அற்புதமாக பொருந்திருக்கிறது. இவரை விட பொருத்தமான ஒரு ஜோடியை இனி ரஜினிக்கு கண்டுபிடிக்கவே முடியாது. ஷங்கர் ஐஸ்வர்ய ராயை லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணித்தது தவறில்லை. கோபம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல், நடனம் என அனைத்திலும் ரஜினிக்கு இணையாக அசத்தியிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கர்!
‘பத்து வருஷ உழைப்பு, அதற்கு பலனே இல்லையா’ எந்திரன் படத்தில் ரஜினி பேசும் வசனம் இது. ஆனால் ஷங்கருக்கு பலன் கிடைத்துவிட்டது. பத்து வருஷமாக தனது கனவுப் படத்தை மெருகுப்படுத்திய ஷங்கரின் உழைப்பை எப்படி பாராட்டுவது, வார்த்தைகளே இல்லை ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர். ஒரு தமிழன் எப்படிப்பட்ட கதையும் எடுக்க முடியும் என ஷங்கர் நிரூபித்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு இந்தியனால் இப்படியும் எடுக்க முடியுமா என்ற தடையை உடைத்து விட்டார் ஷங்கர். தனது கற்பனைக்கு ரஜினி மூலம் உயிர் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் ஷங்கர்.
ஷங்கரின் அசுர உழைப்பு படத்தின் காட்சிகள் மூலம் தெரிகிறது. இந்தியாவில் மீண்டும் இந்த படம் போல் படம் வருமா… சான்ஸே இல்ல சூப்பர் ஷங்கர் சார். பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இறுதிக்கட்டத்தில் எந்திரன் படத்தை தனது திரைக்கதையை மூலம் விறுவிறுப்பாகவும், சீட் நுனியில் அனைவரையும் உட்கார வைத்திருக்கிறார் ஷங்கர். இந்த படைப்பாளின் உழைப்பிற்கு ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர். சூப்பர்… சூப்பர்…
தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்!
இரண்டு பேர் இல்லையென்றால் ஷங்கரின் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. இயக்குனர் ஷங்கர் மீது நம்பிக்கை வைத்து ஷங்கரின் கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு நன்றிகள். படத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளைளயும் குறையின்றி செய்து கொடுத்து, தமிழ் திரையுலகிற்கும், இந்திய திரையுலகிற்கும் ஒரு அற்புத மற்றும் பிரம்மாண்ட படைப்பை வெளிக் கொண்டிருக்கிறார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். வாய்ப்பும் வசதியும் அமைத்து கொடுத்து ஹாலிவுட்டுக்கே சவால் விடும் படைப்பை கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு நன்றிகள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்!
சான்ஸே இல்ல என்ன சொல்வது இந்த மனிதனின் உழைப்பை. ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு அழகாக இருக்கிறார் ரஜினி. இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. விஞ்ஞானியாக நடிக்கும் போது தனது நடிப்பின் அனுபவத்தை வெளிகாட்டியிருக்கிறார். அதே ரஜினி, சாதுவான ரோபோவிற்கும், விஸ்ரூப ரோபோவிற்கும் நடிப்பு மூலம் வேறுபடுத்தி நடிப்பில் உச்ச கட்டத்தை எடடியுள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார். விஸ்ரூப ரோபோவாக ரஜினி செய்யும் நடிப்பை வர்ணயிக்க வார்த்தை இல்லை. பஞ்ச் டயலாக் இல்லாத ரஜினி ஸ்டைல் மானரிஸங்கள், அதிரடி அறிமுகக் காட்சி, எதுவுமே இல்லாமல் இயக்குனரின் ஷங்கரின் உணர்வுகளை உள்வாங்கி அப்படியே வெளி காட்டியிருக்கிறார் ரஜினி. பஞ்ச் டயலாக் இல்லாமல் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து இரண்டு பாதியில் மிரட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் மனநிலையில் உள்ள ரோபோ எப்படியிருக்கும்… வில்லத்தனத்தின் மொத்த உருவம் எப்படி இருக்கும்… அத்தனைக்கும் ஒரே விடை ரஜினி எந்திரனில் செய்துள்ள வேடங்களே.
ஹேட்ஸ் ஆஃப் ரஜினி சார்!
மொத்தத்தில் ‘எந்திரன்’ இந்திய சினிமாவில் சர்வதே அளவில் தலைநிமிர செய்துள்ளது.

Comments

Most Recent