பால் தாக்கரே-வை சந்தித்த ரஜினி!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1840.jpg
‘எந்திரன்’ படத்தின் இந்தி பதிப்பு ‘ரோபோ’. இதன் பிரத்யேக காட்சி, முக்கிய பாலிவுட் பிரபலங்களுக்காக நேற்று முன்தினம் மும்பையில் திரையிடப்பட்டது. ஜூகு பிவிஆர் திரையரங்கில் இந்த பிரத்யேக காட்சி இரவு 9.30 தொடங்கியது. இதற்காக ரஜினி தனது குடும்பத்துடன் மும்பை வந்தார். இந்த நிலையில் இன்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே வீட்டுக்குச் சென்றார் ரஜினிகாந்த். அவரிடம் ஆசியும் பெற்றார். எந்திரன் படத்தை பார்க்க வருமாறு ரஜினி பால் தாக்கரே-விடம் கேட்டுக் கொண்டார்.

Comments

Most Recent