தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே எந்திரன் புதுமையான படம். இப்படியொரு படம் இந்தியாவுல தயாரானதே பெருமையான விஷயம். எந்திரன் டெக்னிக...
எப்படி வந்திருக்கு உங்க கனவு படம்?
கனவுன்னா சாதாரண கனவில்லை. இப்படியொரு சயின்ஸ்பிக்ஷன் படத்தை தமிழ்ல பண்ண முடியுமாங்கறதே கனவுதானே. பத்து வருஷங்களுக்கு முன்னால நினைச்சு, கடந்த மூμ வருஷங்களுக்கு முன்னால வர, அது அப்படித்தான் இருந்தது.
ஆனா, சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் சாரால என்னோட கனவு படம் சாத்தியமாயிருக்கு. அதுக்காக அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது ஈடில்லாததுதான்.
முழு படத்தையும் பார்த்துட்டு எங்க டீம் எல்லாருக்குமே ரொம்ப திருப்தி. . . எதிர் பார்த்ததை விட அவ்வளவு சிறப்பா வந்திருக்கு. எனக்கே பிரமிப்பா இருக்கு.
படத்தோட கதை பற்றி விதவிதமா பேச்சு இருக்கே?
வெளிய ஆயிரம் சொல்லலாம். ஆனா, அந்த எதுவும் படத்துல இல்ல. கதைன்னு சொல்லμம்னா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, ஒரு சயின்டிஸ்ட் ரோபோவை உருவாக்குகிறார். அந்த ரோபோவை ஒரு விஷயத்துக்காக, மக்களோட மக்களா நடமாட விடறார்.
அதனால ஏற்படற சுவாரஸ்யமான விஷயங்கள்தான் கதை. இதைத்தாண்டி வெளிய பேசற கதைல, உண்மையில்லை. அது மட்டுமில்லாம, இதுல எந்த ஹாலிவுட் படத்தின் சாயலும் இல்லை.
இன்னைக்கு கிராமத்துல உள்ளவங்க கூட, ஹாலிவுட் படங்கள் பற்றி தெரிஞ்சு வச்சிருக்காங்க. அப்படியிருக்கிறப்ப இரண்டரை வருஷங்களா உழைச்சு, நாங்க அப்படி பண்ண தேவையில்லையே?
அப்ப என்ன புதுசா சொல்லப் போறீங்க?
படமே புதுசு. கான்செப்டே புதுசு. இந்தப் படத்துல வர்ற எந்த காட்சியையும் ஹாலிவுட் படத்துல கூட பார்த்திருக்க முடியாது. நானே ஒரு கிரியேட்டர். நான் ஏன் இன்னொருத்தர் விஷயத்தை எடுக்கணும்?
ஒவ்வொரு காட்சியையும் எந்த படத்தின் சாயலும் வந்திடக் கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டு திரைக்கதை அமைச்சிருக்கோம். அதனால படத்துல எல்லாமே பிரெஷ்ஷா இருக்கும். ஒரு விஷயம்… இதை நானே சொன்னா நல்லாயிருக்காது.
இருந்தாலும் சொல்றேன். அனிமேட்ரானிக்ஸ்க்காக ஸ்டான்வின்ஸ்டன் என்கிற ஹாலிவுட் ஸ்டூடியோவுக்கு போனோம். நாங்க
ஏற்கனவே படத்தை ரஃபா ரெடி பண்ணி வச்சிருந்தோம்.
அதை அங்க திரையிட்டு, இதுதான் கதை, இதுக்கு ரோபோ பண்ணணும்னு சொன்னதுமே, அங்க இருந்த எல்லாருமே 'வாவ்… எக்ஸலன்ட். ரொம்ப புது ஐடியாவா இருக்கு'னு எங்க கையை பிடிச்சு குலுக்கினாங்க. ஏற்கனவே பண்ணிய ஒரு விஷயம்னா இந்த பாராட்டை அவங்க தந்திருக்க மாட்டாங்களே?
சரி, அனிமேட்ரானிக்ஸ்ல ரஜினியை என்ன பண்ணியிருக்கீங்க?
நிறைய பண்ணியிருக்கோம். ஒரு ரோபோ பண்ணμம்னா இங்க அனிமேஷன்ல பண்ணலாம். ஆனா, அது அனிமேஷன்னு ரசிகனுக்கு தெரிஞ்சுரும். அப்படி தெரிஞ்சா எங்க உழைப்பு போச்சு.
அதனால, அனிமேட்ரானிக்ஸ்ல ரஜினி மாதிரியே மெட்டல்ல ஒரு உருவத்தை உருவாக்கி, அதை இயங்க வச்சோம். இந்த இயக்கத்துக்குதான் அனிமேட்ரானிக்ஸ் தேவைப்பட்டது. ரசிகனின் நம்பகத் தன்மைக்காக, அதிக செலவு பண்ணி அதை பண்ணியிருக்கோம்.
அதுமட்டுமில்லாம வேற சில டெக்னிக்குளையும் இதுக்கு பயன்படுத்தியிருக்கோம். ரோபோ ரஜினி பண்ற விஷயங்கள் எல்லாமே அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.
ரஜினி மூணு கேரக்டர்ல வர்றாராமே?
ஆமா. ஒண்ணு சயின்டிஸ்ட். இன்னொன்னு ரோபோ. அடுத்த கேரக்டர் சஸ்பென்ஸ். டிரெய்லர் வெளியீட்டு விழாவுல நான் சொன்ன மாதிரி, அந்த மூணாவது கேரக்டர் வர்ற ஒவ்வொரு நிமிஷமும் ரசிகர்கள் கைதட்டிட்டே இருப்பாங்க.
டிரெய்லர்லயே பார்த்திருப்பீங்க… மிரட்டலான விஷயங்கள் படத்துல நிறைய இருக்கு. இந்தப் படத்துக்காக ரஜினியின் உழைப்பு அபாரமானது. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா கேட்டு கேட்டு தெரிஞ்சுகிட்டே இருந்தார்.
எவ்வளவு நேரமானாலும் ஸ்பாட்லயே இருப்பார். அவரோட எளிமையை பத்திதான் எல்லாரும் பேசுவாங்க. ஆனா, அவரோட உழைப்பை 'எந்திரன்'ல பார்த்து அசந்திருக்கேன்.
வழக்கமா, உங்க படத்துல பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்…
இதுல எல்லா பாடலுமே ரொம்ப ஸ்பெஷல். 'காதல் அμக்கள் உடம்பில் எத்தனை…' பாடலுக்காக புது லொகேஷனை தேடும் போது எங்களுக்கு பிரேசில்ல கிடைச்சது அந்த ஆச்சர்யம். பாலைவனம் மாதிரியான இடத்துல ஏரி. ஒரு ஏரின்னா பரவாயில்லை… திட்டுதிட்டா நிறைய ஏரிகள் இருந்தது.
மேல இருந்து பார்த்தா அவ்வளவு சூப்பரா இருக்குமேன்னு ஹெலிகாப்டரை வச்சு அந்த பாடலை எடுத்தோம். படத்துல அந்த லொகேஷன் ரொம்ப புதுசா இருக்கும். அதே போல சயின்டிஸ்ட், ரோபோ, லேப்புன்னு போயிட்டிருக்கிற கதையில ரோபோ பத்தி ஒரு பாடல் வைக்கலாம்னு நினைச்சோம்.
அந்த பாடலை எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கும் போது ரகுமான் சொன்னார், 'அதை ராப் ஸ்டைல்ல பண்ணினா என்ன'னு. சரின்னு பண்ணின பாடல் தான் 'பூம் பூம் ரோபோ…' விஞ்ஞானத்துக்கும் காதலுக்குமான பிரியத்தை சொல்ற பாடல் அது.
அடுத்து கிளைமாக்ஸ் பாடல் 'அரிமா அரிமா…' இது ஒரு ஆச்சரியமான பாடலா இருக்கும். பிரபுதேவா நடனம் அமைச்சிருக்கார். பாடலோட முடிவுல அதிர்ச்சியும் இருக்கு.
அதிர்ச்சின்னா?
இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிரும். ரசிகன் எதிர்பார்க்காத பல டெக்னிக்கல் விஷயங்கள் படத்துல இருக்கு. படம்பாருங்க, ஆச்சர்யங்கள் அடுக்கிக்கிட்டே போகும்.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இல்லைன்னா, படத்தை முடிக்க 4 வருஷங்கள் ஆகியிருக்கும்னு ஒரு விழாவுல பேசினீங்களே?
உண்மைதான். ரத்னவேலு கவித்துவமான ஒளிப்பதிவாளர். எதையும் பதியற மாதிரி பளிச்சுன்னு எடுக்கிற கேமராமேன். எனக்கும் அப்படிப்பட்டவர் தான் தேவையா இருந்தது. ஒவ்வொரு ஷாட்டுக்கும் லைட்டிங் முக்கியம்.
முதல்லயே பக்காவா ப்ளான் போட்டு, இந்த ஷாட் இங்க எடுத்துட்டு அடுத்த ஷாட்டுக்கு எங்க கேமராவை வைக்க போறோம்னு முதல் நாளே முடிவு பண்ணிடுவோம். இதுக்கு அவரோட உழைப்புதான் காரணம்.
நடிகர்கள் செட்டுக்கு வர்றதுக்குள்ள எல்லாத்தையுமே பக்காவா ரெடி பண்ணி வச்சிருப்பார். முதல்ல ஒரு ஷாட் முடிச்சுட்டு, அடுத்தாப்ல எங்கஷாட் வைக்கிறோம்னு யோசிச்சுலைட்டிங் வச்சு, ரெடி பண்ணினா, ரொம்ப லேட் ஆகும்.
ஆனா, அவர் பக்கா திட்டத்தோட வேலை பார்த்தார். அதனாலதான் படத்தை வேகமா முடிக்க முடிஞ்சுது.
ரஜினியை இளமையா காண்பிக்க ஏதோ டெக்னிக் பயன்படுத்தினீங்களாமே?
டெக்னிக்குன்னு சொல்ல முடியாது. 'சிவாஜி' படத்துலயே அவரை இளமையா காண்பிச்சாச்சு. இதுல இன்னும் இளமையா காண்பிச்சிருக்கோம். எப்படிங்கறதை பட ரிலீசுக்கு பிறகு சொல்றேன்.
அப்ப சொன்னாதான் சில விஷயங்கள் சரியா இருக்கும். ரிலீசுக்குப் பிறகு நீங்க கேட்கவும் நான் சொல்லவும் அதிக மேட்டர் இருக்கு.
ஆக்ஷன் காட்சிகள்?
ரஜினி படத்துல அது இல்லாமலா? ஒரு ரயில் சண்டை இருக்கு. வழக்கமான சண்டைக்காட்சியா அது இருக்காது. ரஜினி ரொம்ப ரிஸ்க் எடுத்து சண்டை போட்டிருக்கார். ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன், பல முறை ஆக்ஸிடென்ட்டை இந்தசண்டைக் காட்சிகளுக்காக சந்திச்சிருக்கார்.
ஒரு கட்டத்துல அவர் பிழைப்பதே கஷ்டங்கற நிலைமைக்கெல்லாம் போயாச்சு.ஆனா, மீண்டு வந்து அடுத்தடுத்த சண்டைக்காட்சிகளை அமைச்சார். ஒரு சேஸிங் இருக்கு. ரொம்ப பரபரப்பா இருக்கிற காட்சி அது.
அடுத்து கிளைமாக்ஸ் பைட். த்ரில்லிங்கா, இப்படியெல்லாம் பண்ண முடியுமாங்கற மாதிரியான சண்டைக்காட்சி அது.
கிளைமாக்ஸை புதுமை பண்ணியிருக்கீங்களாமே?
உலகத்திலேயே முதன்முறையா வித்தியாசமான அனிமேஷன் பண்ணியிருக்கோம். 'குங்குஃபூ ஹஸில்', 'கிடாரோ' உட்பட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் பண்ணியிருக்கிற பிராங்கி சங்க்தான் 'எந்திரனு'க்கு பண்ணியிருக்கார்.
அவராலேயே குறிப்பிட்ட காலத்துக்குள்ள அந்த அனிமேஷனை முடிக்க முடியலை. என்ன சொன்னார்னா, 'இதுஎனக்கே சவாலான விஷயமா இருக்கு. அதுக்கான நேரத்தை அது இன்னும் கேட்குது.
பக்காவா பண்ணுவோம், வெயிட் பண்ணுங்க'னு நேரம் எடுத்து பண்ணிக்கொடுத்தார். கிளைமாக்ஸ்ல உங்க புருவங்களை அது விரிய வைக்கிறது நிச்சயம்.
Comments
Post a Comment