நடிகைக்கு பிரியாணி நடிகரை முற்றுகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சசி உதவியாளர் சம்பத் ஆறுமுகம் இயக்கும் படம் 'காந்தி கணக்கு'. இதன் படப்பிடிப்பு கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்தது. கதைப்படி படத்தின் ஹீரோ ரமணா ஒரு பிச்சைக்காரிக்கு பிரியாணி வாங்கி கொடுப்பது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டும். கோயம்பேடு மார்க்கெட்டில் படப்பிடிப்பு நடத்தும்போது அதிக கூட்டம் கூடுவதால் காட்சியை மறைந்திருந்து படம்பிடிக்க தீர்மானித்தார்கள். அதன்படி மாருதி வேனில் கேமராவை பொருத்தி மறைந்திருந்தார்கள், பேச்சி என்கிற துணை நடிகை பிச்சைக்காரி வேடம் அணிந்து மார்க்கெட்டில் அமர வைக்கப்பட்டார். முகத்தில் கருப்பு கண்ணாடி அணிந்து வந்த ரமணா அவருக்கு பிரியாணி பொட்டலத்தை கொடுத்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். இதை ஒளிப்பதிவாளர் கார்த்திக் படம்பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பெண் "யாரோ ஒருத்தன் டீசண்டா இருக்கான். பிச்சைக்காரிக்கு பிரியாணி வாங்கிக் கொடுக்கிறான்' என்று சத்தம்போட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூடிவிட்டனர். ரமணா இது சினிமா என்று கூறியும் நம்பவில்லையாம். 'சினிமா என்றால் கேமரா எங்கே? லைட் எங்கே?' என்று கேள்வி கேட்க, உடனே கேமரா இருந்த வேனை அருகில் கொண்டு வந்து காட்டிய பிறகே கூட்டம் கலைந்து சென்றது. 'காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கோயம்பேட்டில் படம் எடுக்கும்போது அதிக கூட்டம் கூடிவிடுகிறது என்பதாலும் இப்படி ஒரு முயற்சி செய்தோம். அது விபரீதமாக போய்விட்டது' என்றார் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.


Source: Dinakaran

Comments

Most Recent