இயக்குனர்கள் மீது அமலா பாய்ச்சல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'மைதிலி என்னை காதலி', 'அக்னி நட்சத்திரம்' என வெள்ளிவிழா படங்களில் அசத்திய அமலா தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவை காதல் மணம் புரிந்தபிறகு இல்லறத்தில் மூழ்கிவிட்டார். நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் மத்திய விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறார். மிருக வதையை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் நெல்லூரில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அமலா கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். 'சினிமாவில் வன்முறை காட்சிகள் பெருகிவிட்டது. மானபங்கம், கொலை, ஆபாசம், வன்முறை இல்லாமல் படங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. நாகார்ஜூனா படங்களிலும் அதிகளவில் வன்முறை காட்சிகள் இடம் பெறுகிறது. இதுபோன்ற காட்சிகளை காட்டித்தான் மக்களை கவர வேண்டுமா? மனதை கவருவதற்கு மற்ற காட்சிகளே கிடைக்கவில்லையா? இதை இயக்குனர்களும் புரிந்துகொள்ள வேண்டும். சமுதாயத்தில் குற்றங்கள் குறைவதற்கு தோதாக படங்களிலும் வன்முறை காட்சிகளை குறைக்க வேண்டும்' என்றார்.


Source: Dinakaran

Comments

Most Recent