சினேகாவுக்கு மீண்டும் ஆபாச எஸ்எம்எஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை சினேகாவுக்கு மீண்டும் ஆபாச எஸ்எம்எஸ்கள் வருவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார். சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியதாக ஏற்கனவே பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நேற்று பகல் 12 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த புகார் மனுவில், ஏற்கனவே தொல்லை கொடுத்த ராகவேந்திரா மீண்டும் நடிகை சினேகாவுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வருவதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம்.எஸ். தகவலில் “என்றைக்கும் நான்தான் உன் கணவன்” என்று கூறியுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய எஸ்எம்எஸ்கள் அனுப்பி வருவதாகவும் இது சினேகாவை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த எஸ்எம்எஸ்களை அனுப்பியது ராகவேந்திராதானா என உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Source: Dinakaran

Comments

Most Recent