எந்திரன் அனுபவத்தை மறக்கவே முடியாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி போட்டி நடக்கிறது, ஏதோ ஒரு நாட்டை சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்களின் புகழ்க் காலம் ஓராண்டு தாண்டுவதில்லை. ஐஸ்வர்யா ராய் ஸ்பெஷல். உலக அழகி கிரீடம் அவருக்கு சூடப்பட்டது 1994ல். இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் அதை இறக்கி வைக்க ரசிகர்கள் தயாரில்லை. ஏனெனில் இன்னமும் இந்தியாவின் பேரழகி ஐஸ்வர்யா ராய் பச்சன். எந்திரன் அவருக்கு தமிழில் ஐந்தாவது படம். அவர் மனதில் முதன்மையான படம். நாயகியாக எந்திரன் படப்பிடிப்பில் அவர் சந்தித்த அனுபவங்களை கேட்டோம். அதற்கு அவர் உற்சாகமாக அளித்த பதில்…

ஷங்கரோடு இதுக்கு முன்னாடி வொர்க் பண்ணிருக்கேன்.. அது வேற மாதிரியான படம்.. எனக்கு ரெண்டு ரோல்.. கேரக்டரை மையமா வச்சு நடிக்க வேண்டியதா இருந்துது.. எந்திரன் அந்த மாதிரி இல்லை.. நான் முழுக்க முழுக்க கமர்ஷியல் அதுவும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துல நடிக்கிறது இதுதான் முதல் தடவை. நிறைய ஆக்ஷன் சீன்ஸ் இருக்குனு சொன்னார். ஷங்கரோட ஸ்டோரி போர்டை பார்த்தப்ப இவ்வளவு ஆக்ஷனானு பிரமிச்சு போனேன்.. எப்படி இதையெல்லாம் விஷுவலா கொண்டு வர போறார்னு நினைப்பேன்.. ஷூட்டிங் நடந்தப்பதான் அவர் எந்த அளவுக்கு கவனமா இதுக்கு ப்ளான் பண்ணிருந்தார்னு புரிஞ்சுது.. வொண்டர்புல் ஜாப்..

எந்திரன்ல நான் ஒரு ஸ்டூடன்டா வர்றேன்.. சனா என்னோட பேரு. இதுக்கு மேல சொன்னா தப்பு.. படம் பாத்துட்டு நீங்கதான் என் கேரக்டரை பத்தி சொல்லணும்.. 'கிளிமஞ்சாரோ' பாடலை ஷூட் பண்றதுக்கு மச்சுபிச்சு மலைய செலக்ட் பண்ணினதே சூப்பர் ஐடியாதான்.. உலகத்தின் எங்கோ ஒரு மூலைல இருக்கிற அந்த லொகேஷனை கண்டுபிடிச்ச ஷங்கரை பாராட்டணும்.. அந்த இடத்துக்கு போய் சேர்றதுல இருந்து பாடல் ஷூட் பண்ணி முடிச்ச வரைக்கும் என்னோட அனுபவத்தை மறக்கவே முடியாது.. பெரிய அட்வெஞ்சர் அது.. நிறைய டான்சர்கள், காஸ்ட்லியான காஸ்ட்யூம்ஸ்.. ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ஏன்னா, இந்த மாதிரியான வாய்ப்பு என் கேரியர்ல கிடைச்சதில்லை.

'காதல் அணுக்கள்' இப்படி அட்டகாசமான படத்துல இந்த மாதிரி ஒரு மெலடியானு அசர வைக்கிற பாடல். எனக்கு ரொம்ப பிடிச்ச மெலடி அது. அடிக்கடி முணுமுணுக்கிற பாடலும் கூட. பிரேசில்ல இருக்கிற லாங்காய் பாலைவனத்துல ஷூட் நடந்துது. இப்படியொரு லொகேஷனை கற்பனைலகூட பார்த்ததில்லை. பாலைவனத்துக்கு நடுவுல குட்டி குட்டியான ஏரிகள் பிரமாதம். ஸ்டைல்கிங் ரஜினி இந்த பாடல் சீன்ல செம கேஷுவலா நடிச்சிருப்பார்.. பாத்தா மெய்மறந்து நிப்பீங்க, நிச்சயமா..

'அரிமா அரிமா' பாடல் படத்துல முக்கியமான சிச்சுவேஷன்ல வருது. ரஜினி அதுல நிறைய வருவார். நானும் அதிகமா வருவேன். ரொம்ப பிரமாண்டமான செட் அந்த சீனுக்கு தேவையா இருந்தது. சாபு சிரில் அவ்வளவு அருமையா பண்ணியிருக்கார். மூணு விதவிதமான செட். அவ்வளவு பெரிய செட்ல நடிச்சது விஷுவலா ரொம்ப புது அனுபவம். ரகுமான் இசை பவர்ஃபுலா இருக்கும். வித்தியாசமா டிரை பண்ணியிருக்கார் ஷங்கர். ரஜினி சாரோட கிளாமரான காஸ்ட்யூம்ல ஆடியிருக்கேன். அத்தனை பேரும் ரோபோ டிரெஸ் போட்டுட்டு பெர்ஃபாம் பண்றது ஈசியில்ல. மகிழ்ச்சியா கஷ்டப்பட்டிருக்காங்க எல்லாரும்..

ரஜினி சாரை பத்தி எக்கச்சக்கமா கேள்விப்பட்டிருக்கேன்.. படிச்சிருக்கேன்.. படத்துல அவரோட நடிக்கிறதும், அவர் நடிப்பை பக்கத்துல இருந்து பாக்குறதும் புது அனுபவம்.. அவரோட கமிட்மென்டை பார்த்து அசந்துட்டேன். அற்புதமான மனிதர். சூப்பர் ஸ்டார்ங்கிற பந்தா கொஞ்சம்கூட இல்லாம எளிமையா பழகினார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன்.
எந்திரன் மாதிரியான ஒரு பிரமாண்டமான படத்தை எடுக்கணும்னா அது கலாநிதி மாறனால் மட்டும்தான் முடியும்னு ஷங்கர் சொல்லுவார்.. அது எவ்வளவு கரெக்ட்னு படம் பார்க்கும்போது ஒவ்வொருத்தரும் உணருவாங்க.. சன் பிக்சர்ஸ் பேனர்ல வொர்க் பண்ணினது எனக்கு பெருமையா இருக்கு.. இந்திய சினிமா வரலாற்றுல எந்திரன் கண்டிப்பா ஒரு மைல்கல்.. இதுல நடிச்ச அனுபவங்கள் என்னிக்குமே எனக்கு மறக்காது..


Source: Dinakaran

Comments

Most Recent