இனி நான் அனுஷ்கா ரசிகன் :சிம்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அனுஷ்கா உங்களைவிட உயரமானவர் என்று கூறியதற்கே வருத்தபட்ட சிம்பு, அனுஷ்காவை அழைத்து பக்கத்தில் நின்று காட்டினார். சிம்பும் அனுஷ்காவை விட உயரமாகத்தான் இருந்தார். இது எல்லாம் எங்க நடந்தது தெரியுமா, ‘வானம்’ படத்தின் நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது தான்.

முன்பு நான் ஜோதிகா ரசிகன் கூறி கொண்ட சிம்பு, நேற்று மேடையில் இனி நான் அனுஷ்கா ரசிகன் என்று கூறினார். ஏன் இந்த திடீர் மாற்றம் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகராகவும் மாற மாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகராக இருந்தேன். ‘அருந்ததி’ படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகராக மாறிவிட்டேன். பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகராக மாறினேன்…” என்றார் சிம்பு.


Source: Dinakaran

Comments

Most Recent