எந்திரன் சூப்பர் மெகா ஹிட் :தமிழமெங்கும் ரஜினி தீபாவளி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழகம் இன்று தீபாவளி போல் தோன்றுகிறது, அதற்கு காரணம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படம் சூப்பர் மெகா ஹிட் ஆகியுள்ளது. இன்று காலை 5 முதல் எந்திரனின் முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். முதல் தகவல் படி படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார். இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம் தான் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்சி ஒவ்வொன்றிலும் புதுமை, ரஜினியின் சூப்பர் ஸ்டைல், ஐஸ்-ன் சொக்க வைக்கும் அழகு, அழகான பாடல் காட்சிகள் என அசத்தி வருகிறது எந்திரன். சென்னை போல் மதுரை, திருச்சி, கோவை என திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி கனியை பறித்து வருகிறது எந்திரன். ரசிகர்களை திரை நட்சித்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் எந்திரன் படத்தை காண ஆவலாக வருகின்றனர்.

சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கும் எந்திரன் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்பதில் துளி சந்தேகமே இல்லை.


Source: Dinakaran

Comments

Most Recent