'மோதி விளையாடு' உள்ளிட்ட படங்களில் நடித்த காஜல் அகர்வால் கோலிவுட்டில் கிளிக் ஆகாமல் டோலிவுட்டுக்கு சென்றார். 'மகதீரா' படம் ...
'மோதி விளையாடு' உள்ளிட்ட படங்களில் நடித்த காஜல் அகர்வால் கோலிவுட்டில் கிளிக் ஆகாமல் டோலிவுட்டுக்கு சென்றார். 'மகதீரா' படம் அவரை முன்னணி நடிகைகள் பட்டியலில் சேர்த்தது. இதையடுத்து அவருக்கு பெரிய பட்ஜெட் படங்கள் குவிந்தன. யார் கண் பட்டதோ மகதீராவுக்கு பிறகு அவர் நடித்து வந்த படங்கள் வெற்றி பெறவில்லை. இந்த சறுக்கல் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படஉலகில் தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது. வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் அவர், டென்ஷனில் இருக்கிறாராம். மளமளவென்று குவிந்த பட வாய்ப்புகள் நின்றுவிட்டதால் ஏற்பட்ட பதற்றம் இது. இன்னொரு வெற்றிக்காக அவர் எதிர்பார்த்திருப்பது ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்திருக்கும் 'பிருந்தாவனம்' படத்தைத்தான். அக்டோபரில் இப்படம் ரிலீஸ் ஆவதால் லப்டப் அதிகமாகி வருகிறதாம்.
Source: Dinakaran
Comments
Post a Comment