‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமான ஆர்யாவுக்கு ‘நான் கடவுள்’ படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம், தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தற...
‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமான ஆர்யாவுக்கு ‘நான் கடவுள்’ படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம், தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தற்போது ஆர்யா வீட்டிற்கு படை எடுத்துள்ளனர். நான் கடவுள் படத்தில் ஆக்ஷன் காட்சியில் அசத்திய ஆர்யா, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் காமெடியுலும் அசத்தினார். பாலா, லிங்குசாமி, அடுத்து மிஷ்கின்… இன்றைய தேதியில் கேரியர் கிராஃப் பிரைட்டாக இருப்பது ஆர்யாவுக்குதான். யுத்தம் செய் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் மிஷ்கின். இந்தப் படத்தில் நடிக்க மிஷ்கினின் தேர்வு ஆர்யா. லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடிக்கும் ஆர்யாவிடம் ஒன் லைன் ஒன்றை கூறியிருக்கிறார் மிஷ்கின். ஒன் லைன் ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துள்ளது.
Source: Dinakaran
Comments
Post a Comment