நயனுக்கு ஒருநாள் சம்பளம் முப்பது லட்சத்து சொச்சம்!

http://www.tamilvix.com/wp-content/uploads/2010/07/Nayanthara5.jpg
பிரபுதேவாவுடனான (கள்ளக்)காதல் வெட்டவெளிச்சத்துக்கு வந்த பிறகு ரொம்பவே பாதுகாப்பாக இருந்து வரும் நயன்தாரா, சமீப காலமாக சென்னை வருவதை தவிர்த்து வந்தார். அதுவும் பிரபுதேவாவின் மனைவி ரமலத்துக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகள் பேசத் தொடங்கியது முதல் அம்மணி கப் சிப். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று நயன்தாராவை தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க அழைத்தது. சினிமாவில் மூணு மாசம் நடிச்சிக் கொடுத்தா கிடைக்கிற பணத்தை மூணே நாள்ல கொடுக்குறதா ரேட் ‌பேசியிருக்கிறார்கள்.

மூணு நாள் சூட்டிங்கிற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு நாள் சம்பளம் முப்பது லட்சத்து சொச்சம். பணத்தாசை யாரை விட்டது. விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் என்ற தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தி ஓ.கே. சொல்லி விட்டார். இந்த விளம்பர சூட்டிங்கை சத்தமில்லாமல் சென்னையில் நடத்த திட்டமிட்ட அந்த ஜவுளிக்கடை நிறுவனம், நயனுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கவும் சம்மதித்தது. சகல வசதிகளுடன் பாதுகாப்பு வசதியையும் அம்மணி கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஏனாம்...?! மாதர் சங்கம் என்ற பெயரில் யாராவது சூட்டிங் நடக்கும் இடத்தில் வந்து பிரச்னை பண்ணி விட்டால என்ன ஆவது? என்ற பயம்தான் காரணமாம். பலத்த பாதுகாப்போடு சூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறார் நயன். விளம்பரத்தை முடித்த கையோடு அம்மணி கேரளாவுக்கு பறக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

Comments

Most Recent