ஷங்கருக்கு மிகவும் பிடித்த ‘காதல் அணுக்கள்’ -இயக்குனர் ஷங்கரின் பேட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எந்திரன் திரைப்படம் தயாரானது எப்படி என்பதை பெரிய புத்தகமாக எழுதலாம். ரசிகர்களுக்கு மாத்திரமல்ல, திரைப்படத் துறையில் பனியாற்றுபவர்களுக்கும் பல பாடங்கள் அதிலே படிக்கக் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வித்தியாசமானது. எல்லா அனுபவங்களுக்கும் பொதுவான தன்மை ஒன்றுதான்: சுவாரசியம். பெரு நாட்டின் மச்சுபிச்சு மலையுச்சி கிராமத்தில் கிளிமஞ்சாரோ பாடல் படமாக்கப்பட்ட விதத்தை ரஜினி நேற்று கலகலப்பாக விவரித்ததை படித்து ரசித்திருப்பீர்கள். இன்று 'காதல் அணுக்கள்' பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷங்கர்…

'காதல் அணுக்கள்' ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பால ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். ஆனா, லொகேஷன் பார்க்க போனா எல்லா இடமும் ஏதோ ஒரு டீவில வர்ற பாடல்ல பார்த்த மாதிரியே இருந்துது. அதே மாதிரி, லொகேஷன் மானேஜரும் ஒவ்வொரு இடத்துக்கு போனதும், 'போன வாரம்தான் இந்த இடத்துல ஒரு தெலுங்கு ஷூட்டிங் நடந்துச்சு.. இந்தி பாட்டு எடுத்தாங்க..' அப்படீம்பார்.

யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, 'கிளிமஞ்சாரோ' பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, 'கிளிமஞ்சாரோ' பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். 'காதல் அணுக்கள்' அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் 'மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்'னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.

ஷங்கருக்கு மிகவும் பிடித்த யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, 'கிளிமஞ்சாரோ' பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, 'கிளிமஞ்சாரோ' பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். 'காதல் அணுக்கள்' அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் 'மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்'னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.

உடனே புறப்பட்டோம். லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஓட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்ல பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணிக்குள்ள ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். ஏன்னா, அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். 'சும்மா சொல்லக்கூடாது, ஷங்கர்.. கூட்டிட்டு வந்தீங்களே இடம்.. இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை..'ன்னு ரஜினி சார் சொல்லிட்டே இருப்பார். அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டர்ல பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு. அதோட ஒரிஜினலை ரீ கிரியேட் பண்ணணும்னு சொல்லி பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேந்து அவரை இன்னும் அழகா காட்டும். 'ஜானி' படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி 'தம்பிக்கு எந்த ஊரு' படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். ரகுமான் அழகா ட்யூன் போட்ருக்கார். ரஜினி சார் கிடார் வச்சுகிட்டு ஃப்ரீயா பண்ணியிருக்கார். படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்னு கேட்டா இதைத்தான் சொல்லுவேன்.

காதல் வந்த ஒரு விஞ்ஞானி பாடுற பாடல். வழக்கமான காதல் மொழி தெரியாது. அதனால் விஞ்ஞான ரீதியா ரொமான்டிக் பாடல் வேணும்னு கேட்டேன். வைரமுத்து சார் நியூட்ரான், எலக்ட்ரான்னு வச்சு வித்தியாசமா எழுதினார். எல்லாரோட பங்களிப்பும் சேந்து அந்த பாடல் சீனை எப்படி சூப்பரா அமைச்சுருக்குன்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க..

CLICK HERE : EXCLUSIVE INTERVIEWS & STILLS : DINAKARAN ENDHIRAN WEBSITE (எந்திரன் இணையதளம்)


Source: Dinakaran

Comments

Most Recent