எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு! - விஜய்என்னைப் பற்றி வருகிற எதிர்மறை விமர்சனங்களை நான் பெரிதுபடுத்துவதில்லை... எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சு என்று கூறியுள்ளார் விஜய்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

வேட்டைக்காரன் படம் வெளியான நிலையில், பொதுவாக விஜய் குறித்து எழுந்துள்ள எதிர்மறை விமர்சனங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய், "எதிர் மறை விமர்சனங்கள் எனக்குப் பழகிப் போச்சு. இதை பெரிசா எடுத்துக்கிறதில்ல நான். வெற்றி தோல்வி குறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை..." என்று கூறியுள்ளார்.

ஒரே மாதிரி படங்களில் நடிப்பதை விட்டு, பெரிய இயக்குநர்களின் படங்களில், வித்தியாசமான ரோல்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "எக்ஸ்பரிமெண்டுக்கு நான் எப்பவும் தயார். இந்த விளையாட்டுக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தயாரா?" என்று கேட்டுள்ள விஜய், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பு மற்றும் நடனத்தையே, தான் தொடர்ந்து தந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்கமாட்ட பாடல்தான் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் குறிப்பிட்டுள்ள விஜய், அடுத்து படத்தின் புரமோஷனுக்காக ஊர் ஊராக தியேட்டர் விஸிட் அடிக்கப் போகிறாராம்!

Comments

Most Recent