'சர்ச்சை' நயன்-தமன்னா 'கொடி பறக்குது'2009ம் ஆண்டில் திரிஷா, நயனதாரா, பிரியாமணி போன்ற முன்னணி நாயகிகள் முடங்கிப் போய்க் கிடந்தனர். இவர்களுக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில் எந்தப் படமும் இடம் பெறவில்லை.

மாறாக இந்த கேப்பைப் பயன்படுத்திக் கொண்டு புகுந்து விளையாடியவர் தமன்னாதான். இவர் தான் 2009ம் ஆண்டின் நாயகி. 2010ம் ஆண்டிலும் தமன்னாவின் கொடியே உயரப் பறக்கும் வாய்ப்புள்ளது.

2009ல் அதிக படங்களில் நடித்தவர்கள்...

சுந்தர்.சியும், நமீதாவும்தான் 2009ம் ஆண்டு அதிக படங்களில் நடித்த நாயகன், நாயகி.

சுந்தர்.சி. நடிப்பில் (தீ, பெருமாள், ஐந்தாம்படை) ஆகியவை வெளியாகியிருந்தன.

நமீதா நடிப்பில் தீ, 1977, இந்திர விழா, பெருமாள், ஜெகன்மோகினி என ஐந்து படம் வெளியானது.

காதல் சர்ச்சையில் நயனதாரா...

நடித்த படத்தை விட நயன்தாராவின் கள்ளக்காதல்தான் படு பரபரப்பாக பேசப்பட்டது 2009ல்.

பல வருடங்களுக்கு முன்பு கல்யாணமாகி, 3 குழந்தைகளையும் பெற்று விட்ட பிரபு தேவாவுக்கும், இவருக்கும் காதல் பற்றிக் கொள்ள, பிரபுதேவா குடும்பம் இரண்டுபட்டது.

திரையுலகப் பெரியவர்கள் என்று கூறப்படும் மூத்தவர்கள் சிலர் பிரபுதேவாவுக்கு புத்தி சொல்லிப் பார்த்தனர். ஆனாலும் அவர் பிடிவாதமாக இருந்ததால் எப்படியோ போகட்டும் என விட்டு விட்டனர்.

நயனதாராவை எங்காவது பார்த்தால் உதைப்பேன் என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் கோபாவேசமாக பேச நயனதாரா நடுங்கிப் போனார், சென்னைப் பக்கம் வராமல் தவிர்த்து வந்தார்.

தற்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு வகையான சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதாகவும், இனிமேல் சண்டை போடாமல் இணக்கமாக வாழ்வது என்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments

Most Recent