ஏ.ஆர்.ரஹ்மானைக் கவுரவித்த லண்டன் டிரினிட்டி கல்லூரி!லண்டன்: ஏ ஆர் ரஹ்மானுக்கு கவுரவ பெல்லோஷிப் வழங்கி கவுரவித்தது பிரிட்டனின் புகழ்பெற்ற ட்ரினிட்டி இசைக் கல்லூரி.

2 ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, உலகமெங்கிலும் பல்வேறு அமைப்புகள் சிறப்பு செய்து வருகின்றன.

இசைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் சார்பில் அவருக்கு 'கவுரவ பெல்லோஷிப்' விருது வழங்கப்பட்டது.

பிரபல இசையமைப்பாளர் பார்ரி வேட்ஸ்வொர்த் இந்த விருதை வழங்கினார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளும், 5 தேசிய விருதுகளும் பெற்றுள்ள ரஹ்மான், விரைவில் கிராம்மி விருதுகளும் பெறுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Comments

Most Recent