பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைவு!

பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் தனது 59வயதில் இன்று அதிகாலை மரணமானதாகத் தெரிவிக்கபடுகிறது. இன்று அதிகாலையில் நடிகர் விஷ்ணுவர்தனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், அதன்காரணமாக உடனடியாக அவர், மைசூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் எனினும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணியளவில் விஷ்ணுவர்தன் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரத் தகவல்களினடிப்படையில் செய்திகள் வெளியாகியுள்ளன .

Comments

Most Recent