அமிதாப்பின் 'பா' இந்திப் படத்திற்கு ரஜினி பாராட்டு

மும்பை, டிச.28- 'பா' என்னும் இந்திப் படத்தில் 12 வயது நோயாளி சிறுவனாக நடித்துள்ள அமிதாப்பச்சனுக்கு ரஜினிகாந்த் நேரில் பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது:

மும்பை அருகே லோனாவாலா பகுதியில் உள்ள பொழுதுபோக்கு விடுதியில், எனது அறைக்கு ரஜினி திடீரென இன்று காலை வந்தார். அப்பகுயில் நடைபெற்று வரும் 'ரோபோ' படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராயுடன் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது வருகை எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

'பா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் எனக்கு பாராட்டு தெரிவித்தார். இப்படத்தை சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பார்க்க அவருக்கு தனியாக ஏற்பாடு செய்திருந்தேன். படம் முடிந்தவுடன் அவர் என்னுடன் பேச ஆர்வத்துடன் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அப்போது எங்களால் பேசிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், லோனாவாலாவில் நேரில் வந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

'பா' படத்தைப் பற்றி நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்படம் தன்னை மிகவும் பாதித்ததாக ரஜினி என்னிடம் கூறினார்.

இவ்வாறு அமிதாப்பச்சன் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Most Recent