ஹீரோவாகும் கருணாநிதியின் பேரன்பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், முதல்வர் குடும்பத்துக்கு ஒரு படம் இயக்கித் தர ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் முதல்வரின் பேரன் அருள்நிதி.

முதல்வர் கருணாநிதியின் இளைய மகனும், படத் தயாரிப்பாளருமான மு.க.தமிழரசுவின் மகன்தான் அறிவு நிதி.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மு க தமிழரசுவே தயாரிக்கிறார்.

கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் காதல் கதையின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் புதுக்கோட்டையில் துவங்குகிறது.

முதல்வர் குடும்பத்து வாரிசுகள் அனைவருமே ஏதோ வகையில் திரைத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, இப்போது முன்னணி தயாரிப்பாளராக மாறியுள்ளார். கமல்ஹாசனை வைத்து அவர் தனது அடுத்த படத்தை தயாரிக்கிறார். உதயநிதி இந்தப்படத்தில் நடிக்கவும் செய்கிறார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் பெரிய தயாரிப்பாளர்தான். இவரது அடுத்த படத்தில் நடிப்பவர் அஜீத். அழகிரி ஏற்கெனவே பல படங்களை விநியோகம் செய்தவர்.

Comments

Most Recent