ரஜினி மகளுக்கு பிப் 14ல் நிச்சயதார்த்தம்



ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது.

ஆக்கர்ஸ் ஸ்டுடியோ எனும் கிராபிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவா திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார். சுல்தான் தி வாரியர் எனும் அனிமேஷன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

சமீபத்தில் கோவா படப்பிடிப்புக்காக கடன் வாங்கிய பிரச்சினையில் கோர்ட், வழக்கு என பெரும் பிரச்சினைகளில் அடிப்பட்டது சௌந்தர்யாவின் பெயர்.

இதைத் தொடர்ந்து மகளை அழைத்துப் பேசிய ரஜினி, கடன்கள் முழுவதையும் அடைத்ததோடு, புதிய படங்கள் எதையும் தயாரிக்க வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்துள்ளார். இப்போதைக்கு கோவாவை மட்டும் திரையிடுவதென்றும், பிறகு சௌந்தர்யாவுக்கு திருமணம் செய்துவிடுவதென்றும் ரஜினி தீர்மானித்தாராம்.

இதைத் தொடர்ந்து, தன்னுடன் நீண்ட நாள் பழகிவரும் ஒருவரை சௌந்தர்யா தந்தையிடம் அறிமுகம் செய்து அவரையே மணக்க விரும்புவதாக தெரிவித்துளளார்.

பையனை ரஜினிக்கும் பிடித்துவிட்டதால், அவரது பெற்றோரிடம் பேசி நிச்சயதார்த்தத்துக்கும் நாள் குறித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மணமகன் பெயர் அஸ்வின் என்றும், இவரது தந்தை சென்னையில் பிரபலமான கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்தும் ராம்குமார் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.

பிப்ரவரி 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது.

அட்வான்ஸ் வாழ்த்துகள் சௌந்தர்யா!

Comments

Most Recent