கணவர் பிராட் பிட்டுக்கு ரூ.1,435 கோடி ஜீவனாம்சம் தரும் ஜூலி!



'மேட் ஃபார் ஈச் அதர்' எனும் அளவுக்கு கச்சிதமான ஜோடியாகத் திகழ்ந்த ஏஞ்சலினா ஜூலி-பிராட் பிட் இருவரும் பிரிந்து செல்வது சட்டப்படி அறிவிக்கப்பட உள்ளது.

ஆனால், இதுவரை இந்த விவாகரத்து செய்திகளை இருவருமே மறுத்து வந்தாலும் இப்போது அதற்கு முந்தைய சட்ட நடைமுறைகளை இருவரும் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து மற்றும் சொத்துப் பிரித்தலுக்கான அனைத்து சட்ட ஆவணங்களும் கையெழுத்தாகிவிட்டதாக ஜூலி மற்றும் பிட் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி கணவர் பிராட் பிட்டுக்கு ரூ.1,435 கோடி ஜீவனாம்சம் தருவார் ஜூலி என்கிறார்கள்.

2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜூலி - பிட் 5 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதில் அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. மேலும் 3 குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டனர்.

இந்த ஆறு குழந்தைகளில் தத்தெடுத்த 3 குழந்தைகள் இருவரது கூட்டுப் பொறுப்பிலும் இருப்பார்கள். இதற்காக தனி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டுள்ளனராம்.

விரைவில் இருவரும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.

எதனால் இந்தப் பிரிவு என்பதை இருவருமே இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent