மூன்று வாரம்... ரூ 300 கோடி.. 3 இடியட்ஸ்!



மூன்றே வாரங்களில் ரூ 300 கோடி வசூல் செய்து பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது ஆமீர்கானின் 3 இடியட்ஸ் திரைப்படம்.

திரையிட்ட நாள் முதல் இந்தப் படத்துக்கு வசூலும் குறையவில்லை... வார நாட்களோ, வார இறுதியோ, ரசிகர் கூட்டமும் குறையவில்லை.

பிரிட்டனில் தொடர்ந்து இந்தப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் 3 இடியட்ஸ் திரையிடப்பட்ட முதல் 2 வாரங்களில் ரூ.21.6 கோடி வசூல் குவிந்தது.

ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் 12 வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தப் படம் (அதே நேரம் தொடர்ந்து அவதார் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது).

இந்திய திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் இந்த அளவு பெரும் வசூலைப் பெறுவது ரஜினியின் சிவாஜிக்குப் பிறகு இதுவே முதல் முறை என்கிறது ஹாலிவுட் இணையதளம்.

அனில் அம்பானி குழுமத்தின் ஓர் அங்கமான பிக் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிட்டது. இப்படத்தை இதுவரை சுமார் 6 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இடியட்ஸின் வசூல் சாதனை தொடர்கிறது...

Comments

Most Recent