"தல" போல் வருமா..? தல தல தான்!

தனது பெயரின் முன்னால் எந்தவொரு பட்டப் பெயரையும் இடுவதைத் தவிர்க்கும் அறிவிப்பை, நடிகர் அஜீத் அறிவித்துள்ளார்.  இது குறித்து, அஜித் நடித்து வெளிவரவிருக்கும் ' அசல்' படத் தயாரிப்பாளர்களுக்கும்,  பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்; "  இனி என் பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம். படத்திலோ அதன் விளம்பரங்களிலோ தன் பெயருக்கு முன் எந்த அடைமொழிப் பெரையும் போட வேண்டாம். இதற்குக் காரணம் தமிழ்சினிமாவின் இன்றைய மாற்றம்தான்.

என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.

என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடைமொழிப்பெயர்களுக்குள்ளும், ஓபனிங் பாடல்களுக்கும், பஞ்ச் வசனக்களுக்குள்ளும் சிக்கித் திணறும் தமிழ்த்திரையுலகில் இது வரவேற்கத் தக்க அறிவிப்புத்தான் என்றோம். அருகில் இருந்த அஜித் ரசிகர் சொன்னார்  "தல" போல் வருமா..? தல தல தான்!.

Comments

Most Recent