ஒரே சமயத்தில் நயன், பிரியாமணி, திரிஷா 'அட்டாக்'!தென்னிந்திய கனவு தேவதைகளான திரிஷா, நயனதாரா, பிரியா மணி ஆகியோர் நடித்த படங்கள் ஒரே சமயத்தில் வெளியானதால் தெலுங்கு ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

ஆந்திராவில் இந்த ஆண்டு மகர சங்கராந்தி விழாவையொட்டி நயனதாரா நடித்த அடூர்ஸ், திரிஷா நடித்த ஓம் நமோ வெங்கடேசா, பிரியாமணி நடித்த சம்போ சிவசம்போ (நாடோடிகளின் ரீமேக்) ஆகியவை வெளியாகியுள்ளன.

மூன்று படங்களிலும் முறையே ஜூனியர் என்.டி.ஆர், வெங்கடேஷ், ரவி தேஜா ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ளனர்.

மூன்று முன்னணி ஹீரோயின்கள் நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டர்களை நிரப்பி வருகின்றனர்.

இதில் தற்போதைக்கு திரிஷாவின் படம்தான் செமத்தியான வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளதாம். இதன் மூலம் தெலுங்குத் திரையுலகிலேயே தான்தான் நம்பர் ஒன் என்ற பெருமிதத்தில் உள்ளாராம் திரிஷா.

2வது இடம் பிரியா மணிக்குக் கிடைத்துள்ளது. நயனதாராவின் படம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாம்.

Comments

Most Recent